Skip to content

Education Essay In Tamil

கல்விப் புரட்சி

இலவசப் பள்ளிக் கல்வித் திட்டம்

வேத விக்ஞான் மகா வித்யா பீடம் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் துவக்கப் பட்ட முதல் கிராமப் பள்ளியாகும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வாழும் கலை மையத்திற்கு அருகில் சில உள்ளூர் சிறுவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்து, கல்வி கற்கும் வாய்ப்பற்ற அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இப்பள்ளியைத் துவக்கினார்.

இக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம்,கல்வி சார்ந்த விளையாட்டுக்கள், இவற்றைக் கற்பித்து, இலவச மதிய உணவு அளிப்பதற்கு ஓர் உள்ளூர் தன்னார்வத்தொண்டர் நியமிக்கப் பட்டார். இது குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. இந்தப் பணி இன்று வரையில் தொடர்கின்றது. பள்ளி படிப்படியாக முன்னேறி ,ஒரு முறையான பாடத்திட்டம் ஏற்படுத்தப் பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இன்று இப்பள்ளியானது இந்தியாவில் கல்விப் புரட்சியினை ஏற்படுத்தி வரும் கிராம மற்றும் பழங்குடி பகுதிகளிலுள்ள இது போன்ற சுமார் 404 இலவசப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.

முதல் தலைமுறை மாணவர்கள் :

அனேகமாக 90 சதவீதம் மாணவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள். மேலும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

"இந்த இளம் வயதில் என் மகள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்திருப்பாள். அவளுக்கு இத்தகைய பள்ளிக் கல்வி கிடைக்குமென நாங்கள் கனவிலும் எதிர்பார்க்க வில்லை. அவள் பள்ளிக்குச் செல்வதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறுகின்றார், திருமதி சாவித்திரி என்னும் தாய்.

மன அழுத்தமற்ற பள்ளி:

மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல தடையாக கருதப்படும் காரணிகளை நடுநிலைப் படுத்தும் பொருட்டு அவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகங்கள்,எழுது பொருட்கள், பேருந்து வசதி, பகலுணவு ஆகிய அனைத்தும் வழங்கப் படுகின்றன. மாணவர்கள் உடல் மற்றும் மன நலம் ஆகியவற்றை அடையும் பொருட்டு , யோகா தியானம், விளையாட்டுக்கள், நடனம், இசை, வரைதல் சித்திரம் தீட்டுதல் போன்ற நுண்கலைகள்,ஆகியவை பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக உருவாக்கப் பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான வாழும் கலைப் பயிற்சியாகிய ஆர்ட் எக்ஸ்செல் பயிற்சி சீராக மாணவர்களுக்கு நடத்தப் படுகின்றது. இப்பயிற்சி வீட்டில் எவ்விதமான எதிர்மறை பாதிப்புக்கள் இருந்தாலும் அவற்றைக் கையாளும் திறனை அவர்களுக்கு அளிக்கின்றது. வெளிப்புற மருத்துவ வசதியும், நடமாடும் மருந்தகமும் இவர்களுக்கு கிடைக்ககூடியவையாகும்.

மாணவர்கள் அரசியல் அமைப்பினைப் பற்றித் தெரிந்து கொள்ள வைக்கவும் அவர்களுடைய தலைமைப் பண்புகளை வளர்க்கவும் பள்ளியில் ஒரு தனி குழுவமைப்பு உள்ளது. பள்ளி மாணவர்களே இக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதன் மூலம் குழந்தைகள் இந்திய ஜனநாயக அமைப்பினைப் பற்றியும் ஆட்சி பற்றியும் நடைமுறையில் தெரிந்து கொள்கின்றனர். இந்தக் குழு சிறிய வகுப்பு மாணவர்களின் பொறுப்பையும் பள்ளியினை நடத்துவதற்குத் தேவையான உதவியையும் செய்கின்றார்கள்.

வளரும் சமுதாயம்:

பெண் குழந்தைகளின் கல்வி பெண்கள் அதிகாரம், இவற்றினை வலியுறுத்தி, தொழில் கல்வியான தையல், கணினிப் பயிற்சி தச்சு வேலை ஆகியவை கற்பிக்கப் பட்டு உயர்நிலைக் கல்விக்குச் செல்லவும் ஊக்குவிக்கப் படுகின்றார்கள்.

முன்னாள் மாணவருக்கும் பள்ளிக்கும் இடையே பந்தத்தை காக்கும் பொருட்டு,முன்னாள் மாணவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப் படுகின்றது. முன்னாள் மாணவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு இப்போதுள்ள மாணவர்களை தங்களுடைய மேற்படிப்பைத் தொடரவும் நோக்கங்களை அடையவும் ஊக்குவிக்கின்றனர். முன்னாள் மாணவர் ,இந்நாள் மாணவரின் பெற்றோரையும் சீராகச் சந்தித்து, கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகின் இயக்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். 101 வது மகளிர் தினம் கொண்டாட உள்ள இந்த வேளை மங்கையரின் சக்தியை தெரிந்து கொள்வோம்.

உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது. அது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும். இதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்மணிகள்தான். கருவை உருவாக்குவதோடு ஆண்களின் கடமை முடிந்து விடுகிறது. பத்துமாதம் கருவை சுமந்து குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்வது வரை பெண்கள் சக்தியின் அம்சமாக இருந்து வலிகளை தாங்கிக் கொள்கின்றனர்.

ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான் வளர்ச்சியில் முதன்மையாக உள்ளனர். குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.

சாதனை பெண்மணிகள்

அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விக்கூடங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான். ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர். செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

மடக்கும் பெண்மணிகள்

ரகசியமாக குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல், மற்றவர்களின் கவனத்தைக் கவர உச்சஸ்தாயியில் பேசுவதிலாகட்டும் இவர்களுக்கு நிகரில்லை. ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.

கிரகிக்கும் தன்மை அதிகம்

பெண்கள் அதீத பார்வைத்திறன் கொண்டவர்கள். எந்த ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும். அதேபோல் பெண்கள் கூர்மையான கவனிக்கும் தன்மை கொண்டவர்கள். முணுமுணுக்கும் ஆண்களிடம் இருந்து வார்த்தைகளை கவனித்து கரெக்டாக பாயிண்ட் அறிந்து கொள்வார்கள்.

மோப்ப சக்தி

மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

கற்பூர புத்தி

எதையும் சட்டுன்னு புரிந்து கொள்ளும் கற்பூரப்புத்தி பெண்களுக்கு மட்டுமே உண்டு என்பது கண்கூடான உண்மை. வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை பெண்களைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெண்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை. போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

தோழமை உணர்வு

பெண்கள் யாருடனும் சட்டென்று பழகிவிடுவார்கள். அதிக தோழமை உணர்வு பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

பிறந்த வீட்டு உறவினர்களையும், புகுந்த வீட்டு உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.

பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

நினைவாற்றல் அதிகம்

கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள். ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல், புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

இப்படி இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதால்தான் பெண்களால் அனைத்துமாகி நிற்க முடிகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாண்டி சாதிக்க முடிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் -பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.